சூர்யாவின் 'சிங்கம் 3' புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Wednesday,July 06 2016]

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'S3' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் சூர்யா ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்றதால் தற்காலிக பிரேக் ஏற்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த பிரேக்கில் படப்பிடிப்புகள்தான் நடைபெறவில்லையே தவிர முதல் பாதியின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் கிட்டத்தட்ட முதல் பாதியின் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் விசாகப்பட்டிணத்தில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விசாகப்பட்டிணம் படபிடிப்பு முடிந்த பின்னர் சென்னை, மலேசியா மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் இந்த படத்தை வரும் ஆயுத பூஜை அல்லது தீபாவளி திருநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதகவும் கூறப்படுகிறது.
சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, ராதாரவி, நாசர், ராதிகா, சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

More News

இன்று 'அஜித் 57' படத்தின் முக்கிய தினம்

'தல' அஜித் நடித்த 'வேதாளம்' கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து அவருடைய அடுத்த படம் தொடங்கப்பட்டுள்ளது...

விக்ரமின் 'இருமுகன்' படத்தில் எத்தனை பாடல்கள். புதிய தகவல்

சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது...

சிம்புவின் 'AAA' படத்தின் டெக்னிக்கல் டீம் இதுதான்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் பெண்டிங்...

சிம்புவின் 'தாறுமாறு' பாடல் ரிலீஸ் தேதி

சிம்புவின் 'இதுநம்ம ஆளு' சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' வெகுவிரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

உதயநிதியின் அடுத்த படத்தின் அப்டேட்

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன்' திரைப்படம் 50 நாட்கள் திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடியதோடு, அவருடைய நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது...