சூர்யாவின் 'எஸ் 3' டைட்டில் திடீர் மாற்றம்
- IndiaGlitz, [Tuesday,January 17 2017]
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கியுள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'எஸ் 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி குடியரசு தினவிழா தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக சூர்யா இன்று முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலான 'எஸ் 3' என்பது தமிழக அரசின் வரிவிலக்கை பெறுவதற்கு தடையாக இருப்பதால் இந்த படத்தின் டைட்டில் 'சி 3' என்று தற்போது மாற்றப்பட்டுள்ளது. 'சிங்கம் 3' என்பதன் சுருக்கம்தான் 'சி 3' என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.