'எஸ்-3' ரிலீஸ் தேதி குறித்து சூர்யாவின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,December 15 2016]

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கம் படத்தின் 3ஆம் பாகமான 'எஸ் 3' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 23 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படும் என்று ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். 'எஸ் 3' படத்தின் ரிலீஸ் தேதி எங்களது முயற்சிகளையும் மீறி எதிர்பாராத ஒருசில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு நன்மைக்கே என்று கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களது எதிர்பாராத முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன்' என்று சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

'எஸ் 3' படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.