சூர்யாவின் வில்லனாக மாறிய நிஜ பைலட்

  • IndiaGlitz, [Saturday,August 20 2016]

சூர்யாவின் சகோதரர் கார்த்தி, மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தில் பைலட்டாக நடித்து வரும் நிலையில், சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' படத்தில் நிஜ பைலட் ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் பெயர் தாகூர் அனுப்சிங் என்பதாகும்
ராமாயணம், மகாபாரதம் உள்பட பல இதிகாச தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்த தாகூர், ஒருசில பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்துவரும் 'எஸ் 3' படத்தின் அவர் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் நடைபெறவுள்ள சென்னை மற்றும் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் தாகூர் அனுப்சிங் கலந்து கொள்வார் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

'ஜோக்கர்' ராஜூமுருகன் என்னிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. லிங்குசாமி

பிரபல பத்திரிகையாளரான ராஜூமுருகன் தனது முதல் படமான 'குக்கூ' படத்திலேயே தனது தனித்திறமையை நிரூபித்த நிலையில் அவருடைய இரண்டாவது படமான 'ஜோக்கர்'...

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நம்பர் ஒன் நடிகை

கோலிவுட் திரையுலகில் அழுத்தமாகவும் ஆழமாகவும் காலூன்றியுள்ள சிவகார்த்திகேயன் இன்னும் ஒருசில வருடங்களில் இளையதலைமுறை நடிகர்களில் நம்பர்...

3 மாதத்தில் 3 படம். உற்சாகத்தில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது...

நல்ல சினிமாவை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க ஒரு புது முயற்சி

சினிமா என்பது ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், அந்த சினிமாவின் மூலம் சமுதாயத்தில் பல அதிர்வுகள் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்...

சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...