சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா?

  • IndiaGlitz, [Wednesday,March 06 2019]

அஜித் நடித்த 'வேதாளம்', 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து இயக்கிய இயக்குனர் சிவா இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யாராக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது. விஜய் உள்பட ஒருசில நடிகர்கள் சிவா இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கார்த்தி நடித்த 'சிறுத்தை' படம் சிவாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்ததோடு, அந்த வெற்றிதான் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்று தந்தது. சிவா-சூர்யா இணையும் படம் சூர்யா 38' படமாக இருக்கும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

சூர்யா தற்போது செல்வராகவனின் 'என்.ஜி.கே. படத்தில் நடித்து முடித்துவிட்டு கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'காப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா, அதனையடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த பாஜக எம்பி: பெரும் பரபரப்பு

மாற்று கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்வதும், சிலசமயம் கைகலப்பில் ஈடுபடுவதும் இந்திய அரசியலுக்கு புதியது அல்ல

விஷாலின் 'அயோக்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு விஷால் நடித்த 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில் நிலையம். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து போவதால் 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் ரயில் நிலையங்களில் ஒன்று

ரீஎண்ட்ரி படத்தில் லைலாவின் வித்தியாசமான கேரக்டர்

அஜித் நடித்த 'தீனா', 'விக்ரம் நடித்த 'தில்' உள்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிகை லைலா நீண்ட இடைவெளிக்கு பின் 'அலிசா' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: பிரபல நடிகரின் கட்சி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கிட்டத்தட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.