close
Choose your channels

'கங்குவா' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்.. 11 காட்சிகளில் மாற்றம்..!

Tuesday, October 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த 'கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில், இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'கங்குவா’ திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழை சென்சார் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இருப்பினும், 11 இடங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சென்சார் அதிகாரிகள் கூறியதாகவும், அதற்கு பல குழுவினர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

வேசி மகன், குறி உள்ளிட்ட வசனங்கள் மியூட் செய்யப்பட்டதாகவும், ரத்தம் தெறிக்கும் சில காட்சிகளில் சென்சார் அதிகாரிகள் கூறிய மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 154 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 34 நிமிடங்கள் என்றும் அறியப்படுகிறது. ஒரு வெற்றிப் படத்திற்கு தேவையான சரியான ரன்னிங் டைம் என்பதால் ரிலீசுக்கு பின்னர் ரன்னிங் டைமை குறைக்க வேண்டிய அவசியம் 'கங்குவா’ படத்திற்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா பிரமாண்டமாக இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment