சூர்யாவின் 'S3' படத்தில் கார்த்தி?

  • IndiaGlitz, [Thursday,May 19 2016]

சமீபத்தில் வெளியான '24' படத்தின் வெற்றி சூர்யா தரப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் விரைவில் ரூ.100கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படமான 'சிங்கம் 3' என்ற 'S3' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் அவரது சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்கவேண்டும் என இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்களுடைய விருப்பம் இந்த படத்தின் மூலம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இரண்டு பாகங்களில் சூர்யா நடித்த துரைசிங்கம் கேரக்டரில் மீண்டும் நடிக்கும் இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஸ்ருதிஹாசன் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் ராதாரவி, விவேக், நாசர், சுமித்ரா, ராதிகா, சூரி, ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.