'பசங்க 2' படத்திற்கு பசங்களை அழைத்து செல்லும் பள்ளிகள்

  • IndiaGlitz, [Tuesday,January 12 2016]

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான 'பசங்க 2' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் ஆதரவால் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது என அனைத்து பத்திரிகைகளும் பாராட்டி வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சமீபத்தில் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒருசில மாவட்டங்களில் இலவச அனுமதி என்ற சலுகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஒருசில பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களை இந்த படத்திற்கு அழைத்து செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னையில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்று தங்கள் பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை இன்று சென்னை ஐட்ரீம்ஸ் தியேட்டருக்கு அழைத்து செல்கிறது. இதற்கான பெற்றோர்களுக்கான சுற்றறிக்கை ஒன்றை நேற்று இந்த பள்ளி வெளியிட்டுள்ளது. இந்த பள்ளியை தொடர்ந்து இன்னும் பல பள்ளிகள் இந்த படத்திற்கு தங்கள் மாணவர்களை அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால் பொங்கல் ரிலீஸ் படங்களையும் மீறி 'பசங்க 2' திரைப்படம் நல்ல வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'அரண்மனை'யின் உரிமையாளர் யார்? சுந்தர் சி விளக்கம்

கோலிவுட் இயக்குனர்களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா இதுவரை....

காஜல் அகர்வாலை பின்பற்றும் ப்ரியாமணி

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்து வரும் 'சக்கரவியூகா' என்ற படத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் ஒரு பாடலை பாடி பாடகியாக அறிமுகமாகியுள்ளார் ....

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் அதர்வா

தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில் படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் அதனையடுத்து சூப்பர் ஹிட் படமான 'அங்காடித்தெரு' மற்றும் 'அரவான்'...

குற்றப்பரம்பரை படத்திற்கு தயாராகிறார் பாலா

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 'குற்றப்பரம்பரை' கதையை படமாக்க முயற்சி செய்தார்....

முதல்வர் ஜெயலலிதாவுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உறவினர்களின் உயிர்களையும்..