விக்ரமுடன் கருத்துவேறுபாடா? சூர்யாவின் பதில்

  • IndiaGlitz, [Monday,May 02 2016]

சீயான் விக்ரமுடன் நடிகர் சூர்யா பிதாமகன்' படத்தில் இணைந்து நடித்திருந்தபோதிலும் இருவருக்கும் இடையே சமீபகாலமாக கருத்துவேறுபாடு இருந்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த தகவலை சூர்யா நமது பேட்டியில் மறுத்துள்ளார்.
சூர்யாவிடம், விக்ரமுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் இயக்கிய 'Spirit of Chennai' குறும்படத்தில் நடிக்க எப்படி சம்மதம் தெரிவித்தீர்கள்' என்று கேட்ட கேள்விக்கு பதில் கூறிய சூர்யா. நானும் விக்ரமும் ஒருவருக்கொருவர் மரியாதையை பரிமாறி கொள்வோம். எங்கள் இருவருக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. 'ஐ' படத்தின் ரிலீஸின்போது நான் அவருக்கு மலர்க்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்தேன். விக்ரமின் இயக்கத்தில் விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் 'Spirit of Chennai' குறும்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியே' என்று கூறினார்.
நான் மட்டுமின்றி அந்த குறும்படத்தில் நடித்த கோலிவுட் திரையுலகின் நடிகர், நடிகைகள் அனைவருமே பெருமைக்குரியவர்கள்' என்று கூறியுள்ளார்.

More News

அஜித்துக்கு விஜய் அம்மா கூறிய அறிவுரை

'தல' அஜித் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு கோலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்...

ஒரே படத்தில் இணையும் மணிரத்னம் நாயகர்கள்

'ஓகே கண்மணி' நாயகன் துல்கர் சல்மான் நடித்த மலையாள படமான 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவனை நடிக்க வைக்க முயற்சிகள்...

நடிகர் சங்க தலைவர் நாசருக்கு கிடைக்கும் கெளரவ பட்டம்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு 'கல்யாண அகதிகள்' என்ற படத்தில் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் நாசர்...

'24' படத்தின் பட்ஜெட் எவ்வளவு? மனம் திறந்த சூர்யா

வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள சூர்யாவின் '24' திரைப்படம் மற்றொரு பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது...

விஜய் 60- விஜய் 61 படங்கள் குறித்த தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்த 59வது படமான 'தெறி' கடந்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி மூன்றாவது வாரமாக சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில்...