36 வயதினிலே, பசங்க-2 வெற்றிக்கு நன்றி தெரிவித்த சூர்யா

  • IndiaGlitz, [Thursday,December 31 2015]

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இதுவரை '36 வயதினிலே' மற்றும் 'பசங்க-2' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளது. இரண்டுமே தரமான படமாக மட்டுமின்றி சமூக தேவையான கருத்துக்களுடன் கூடிய படமாக அமைந்ததால் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு பெரிய வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு சூர்யா தற்போது நன்றி தெரிவித்துள்ளார். இதுபோன்ற வெற்றிகள் மேலும் பல தரமான படங்களை தயாரிக்க தனக்கு ஊக்கம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சூர்யா மேலும் தெரிவித்துள்ளதாவது:

ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாகவும், அவர்களின் மனதில் நல்ல மாற்றங்களை விதைக்கும் மருந்தாகவும் திரைப்படங்கள் தயாரிக்கவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு கடந்த 2014-ல் 2டி எண்டர்டெயின்மெண்ட் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினோம்.


இல்லத்தரசிகர்களின் திறமைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திய '36 வயதினிலே' எங்களது முதல் படைப்பு. இதற்கு தங்களிடமும் மக்களிடமும் அமோக ஆதரவு கிடைத்தது. திரையரங்குகளில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதே உற்சாகத்தில் அடுத்த முயற்சியில் இறங்கினோம்.

'குழந்தைகள் வளர்ப்பு' என்கிற கருத்தை அடிப்படையாக கொண்டு வெளியாகியுள்ள எங்களது இரண்டாவது படைப்பான 'பசங்க-2 படம், தங்களிடமும் மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெற்றோர்களிடம் நல்ல மனமாற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் இந்த படத்தை தியேட்டர்களுக்கு வந்து பார்த்து ரசிக்கின்றனர்.

படத்தின் கருத்துக்களை தொடர்ந்து நீங்கள் வெளிக்கொணர்ந்த விதமும், உங்களது நேர்மையான விமர்சனமும் மாபெரும் வெற்றியை தேடி தந்திருக்கின்றது. மேலும் தரமான படங்களை தயாரிக்க எங்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது.

இந்த வெற்றிகளின் மூலம் எங்களது பொறுப்பு இன்னும் அதிகரித்திருப்பதை நாங்கள் உணர்கிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக தொடர்ந்து முயற்சி செய்வோம்.

நல்ல முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

More News

பாலா படத்தை அடுத்து

விஐபி வில்லனுக்கு கிடைத்த ஹாலிவுட் பட வாய்ப்பு

தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் வெற்றிப்படமான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷால் அமுல்பேபி என்று கேலி செய்யப்பட்ட வில்லன் நடிகர் ...

'கதகளி' 2ஆம் பாதியில் பாடல்களே இல்லை. விஷால்

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பசங்க -2' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று...

இயக்குனர் பாலாவுக்கு சென்சார் கொடுத்த அதிர்ச்சி

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும்...

சூர்யாவுடன் செல்பி எடுத்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய திருவனந்தபுரம் எம்.பியுமான சசிதரூர் அவர்களை கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ...