டுவிட்டரில் ட்ரெண்டாகும் சூர்யா40....! ரசிகர்களுக்கு 6 மணிக்கு செம டீரீட்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யாவின் 40-ஆவது திரைப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் திரைப்படம், இவரின் 40-ஆவது திரைப்படம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரிக்க உள்ளார். இதில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க, டி.இமான் இசையமைக்க உள்ளார். சத்யராஜ், சரண்யா, தங்கதுரை உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களும், இப்படத்தில் இணைந்துள்ளனர்.
கொரோனாவால் படப்பிடிப்புகள் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பின் மீண்டும் அவை துவங்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை -23 சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அன்று முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 22-ஆம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ளார். இந்த அப்டேட்கள் தான் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகின்றன. சூர்யா ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Get set to witness Dear @Suriya_offl sir’s next #Suriya40FirstLook today at 6pm!
— D.IMMAN (@immancomposer) July 22, 2021
Produced by @sunpictures
Directed by @pandiraj_dir #DImmanMusical
Praise God!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments