சூர்யாவின் 36வது படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்

  • IndiaGlitz, [Saturday,September 17 2016]

சூர்யா நடித்து வரும் 34வது படமான 'எஸ் 3' படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும், அவருடைய அடுத்த படமான 35வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் நாம் அறிந்ததே.
இந்நிலையில் சூர்யாவின் 36வது படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த அதிகாரபூர்வமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ஜோக்கர்', கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் 'காஷ்மோரா' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்தான் சூர்யாவின் 36வது படத்தை தயாரிக்கவுள்ளது.
இந்த தகவலை அந்நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் ஹீரோயின், இயக்குனர் உள்பட மற்ற விபரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சீனுராமசாமியின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றதுடன் ஊடகங்களின் பாராட்டுக்களையும் பெற்றது.

சமுத்திரக்கனியின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் நாயகி

சமுத்திரக்கனி நடித்து தயாரித்து இயக்கிய 'அப்பா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடு 100வது நாளை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறது.

தயாரிப்பாளரின் பணத்தை கோடிக்கணக்கில் மிச்சப்படுத்திய அஜித்-சிவா

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் முடிவடிந்து அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர் என்பது தெரிந்ததே.

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகளும், 'கோச்சடையான்' இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்யவுள்ளதாக நேற்று முதல் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் பரவி வரும் நிலையில் இந்த செய்திகளுக்கு தனது சமூக வலைத்தளத்தின் மூலம் செளந்தர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மீண்டும் மோகன்லால் ரீமேக் படத்தில் கமல்ஹாசன்?

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து...