'24' சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி-நேரம்

  • IndiaGlitz, [Saturday,March 12 2016]

சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து இணையதளத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளிவரும் என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் வரும் மார்ச் 14ஆம் தேதி அதாவது வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், கவியரசர் வைரமுத்து எழுதிய இந்த பாடலை பென்னி தயால் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'யாவரும் நலம்' படத்தை இயக்கிய விக்ரம்குமார் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவரவுள்ளது.