சூர்யாவின் '24' படத்தின் புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Wednesday,March 30 2016]
சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் பாடல் வெளியீட்டை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ஏப்ரல் இரண்டாவது வாரம் வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ஏப்ரல் 11ஆம் தேதி பாடல்கள் வெளிவர வாய்ப்புகள் இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் '24' திரைப்படத்தின் 90% கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிந்துவிட்டதாகவும், இந்த படம் விஜய்யின் 'தெறி' ரிலீஸாகி இரண்டு வாரங்கள் கழித்து அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா, சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது.