சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,March 08 2016]

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்து முடித்துள்ள '24' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று வெகுவிரைவில் வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.


விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள '24' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் ஏப்ரல் இறுதியில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தெலுங்கு டப்பிங்கை நேற்று சூர்யா பேசினார் என்ற தகவலையும் பார்த்தோம். இந்நிலையில் விரைவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு சிங்கிள் டிராக்கும் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் மற்றும் டைம் மிஷின் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இளையதளபதியின் 'தெறி'யில் டிஆர் பாடிய பாடல் : சிறப்பு தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் பாடல் வெளியீடு வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு...

மலையாள திரையுலகில் மரணம் அடைந்த மற்றொரு பிரபலம்

2016ஆம் ஆண்டு மலையாள திரையுலகிற்கு நேரமே சரியில்லை போலும். தொடர்ந்து மலையால திரையுலக பிரபலங்கள் அதுவும் நடுத்தர வயது நட்சத்திரங்கள் மரணம் அடைந்து வருகின்றனர்...

மதுரை நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் இன்று ஆஜராவாரா?

ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தின் மீது ரவிரத்தினம் என்பவர் மதுரை நீதிமன்றத்தில...

கமல்-சூர்யா இழந்த உண்மையான நட்பு

மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் மலையாள திரையுலகை மட்டுமின்றி தமிழ்த்திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மீண்டும் தமிழில் ஒரு ஜோம்பி திரைப்படமா?

'நாய்கள் ஜாக்கிரதை' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமிமேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மிருதன்'...