சூர்யாவின் '24' படத்தின் வியாபாரம் தொடங்கியது.
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான சொப்னம் பிலிம்ஸ்' பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
சூர்யாவின் படங்களுக்கு தமிழில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கின்றதோ அதே அளவுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது கடந்த சில ஆண்டுகளாக அறிந்து வரும் உண்மை. இந்நிலையில் '24' படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமை நடிகர் நிதின் நிறுவனமும், கன்னட ரிலீஸ் உரிமையை Brunda Associates என்ற நிறுவனமும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா, சமந்தா, நித்யாமேனன், அஜய், சத்யன், சரண்யா பொன்வண்ணன், மற்றும் பலர் நடித்த '24' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் 2016 பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout