close
Choose your channels

சூர்யாவின் '24' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Tuesday, March 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஏப்ரலில் இசை வெளியீடு என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளது.


மேலும் இந்த படத்தை வரும் மே மாதம் 6ஆம் தேதி வெளியிட ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் பரபரப்பின் இடையே இந்த படம் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் தேர்தல் முடிந்தவுடன் ரஜினியின் 'கபாலி' ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யா தனது 2D நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். சூர்யா, சமந்தா, நித்யாமேனன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment