சூர்யா படங்களின் '100 நாட்கள்' திட்டம்

  • IndiaGlitz, [Sunday,September 06 2015]

'மாஸ்' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து, அடுத்த 100 நாட்களில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 'யாவரும் நலம்', 'மனம்' படங்களின் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யாமேனன், அஜய், சத்யன், சரண்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமத்து வருகிறார்.

இந்நிலையில் செப்டம்பரில் '24' படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் சூர்யா, ஒரு மாதம் மட்டும் இடைவெளி விட்டு உடனே நவம்பரில் ஹரியின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இயக்குனர் ஹரி எப்போதுமே திட்டமிட்டு படப்பிடிப்பை தொடங்கி குறித்த காலத்திற்குள் முடித்துவிடும் வல்லமை படைத்தவர். அதன்படி இந்த 'சிங்கம் 3' படப்பிடிப்பை சரியாக 100 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி அதற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

சூர்யாவின் '24' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் 100 நாட்களிலும், சூர்யாவின் 'சிங்கம் 3' படப்பிடிப்பு 100 நாட்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது போல் இந்த இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமாக உள்ளது.

More News

'த்ரிஷ்யம்' இயக்குனர் ஜீத்துஜோசப்பின் அடுத்த பட ரிலீஸ் தேதி

ஜீத்துஜோசப் இயக்கிய மலையாள திரைப்படமான 'த்ரிஷ்யம்' மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி கிட்டத்தட்ட இந்தியாவின் முக்கிய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது....

கமல், அரவிந்தசாமியை அடுத்து சிம்புவை டார்கெட் செய்த குஷ்பு

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு வெறித்தனமாக இவரை ரசித்தனர்.....

ஜெயம் ரவியின் 'பூலோகத்திற்கு விடிவு காலம் வருமா?

ரோமியோ ஜூலியட்', 'சகலகலாவல்லவன்' மற்றும் 'தனி ஒருவன்' ஆகிய மூன்று படங்களை கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மூன்று மாதங்களில் வெளியிட்டு முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்துவிட்டார் ஜெயம் ரவி......

தமிழிலும் இந்தியிலும் பிசியான வடிவேலு நாயகி

வடிவேலு ஹீரோவாக நடித்த 'தெனாலிராமன்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை மீனாட்சி தீக்சித், சமீபத்தில் ஒரு தமிழ் படத்திலும், இந்தி படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.......

'ஜிந்தா' படத்தில் கார்த்திக் நடிக்கும் கேரக்டர்?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆன கார்த்திக், சமீபத்தில் வைபவ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....