இந்திய ராணுவத்தின் அடுத்த சர்ஜிக்கல் தாக்குதல்: தீவிரவாத முகாம்கள் அழிப்பு

  • IndiaGlitz, [Wednesday,September 27 2017]

மியான்மர் நாட்டின் எல்லையை தாண்டி பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் வந்த தகவல்களில் இருந்து நாகலாந்து தனிநாடு கோரிய தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்த தாக்குதலில் மியான்மர் எல்லைக்குள் முகாமிட்டிருந்த நாகலாந்து பயங்கரவாதிகள் ஏராளமானோர் பலியானதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த தாக்குதலில் 70 கமாண்டோ வீரர்கள் ஈடுபட்டதாகவும், அவர்களுடைய துல்லிய தாக்குதல் காரணமாக தீவிரவாதிகள் அடியோடு அழிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் சென்று இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய நிலையில் சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தோனி, சச்சின் படங்களை அடுத்து மேலும் ஒரு கிரிக்கெட் படம்

இந்திய கிரிக்கெட் வெற்றியாளர்கள் குறித்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி வருவதை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல கிரிக்கெட் வீரரின் படம் உருவாகவுள்ளது.

உலகில் அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகைகள் பட்டியலில் விஜய் நாயகி

இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் மற்றும் ஆங்கில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 

பாரீஸ், பல்கேரியாவுக்கு பயணம் செய்யும் சாயிஷா

விஜய் இயக்கிய 'வனமகன்' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நடிகை சாயிஷா, முதல் படத்திலேயே அனைவரும் கவரும் வகையில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.

ஓவியாவின் அடுத்த படத்தின் முழு விபரங்கள்

ஓவியாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ஓவியா ஆர்மியினர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ஓவியாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சனிக்கிரஹத்திற்கு செல்லும் '2.0' பட நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் நாயகி எமிஜாக்சனுக்கு அமெரிக்க டிவி தொடர் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.