கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் செய்த வெட்னரி டாக்டர்..! வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஷ்யாவை சேர்ந்த கால்நடை டாக்டர் ஒருவர் கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்த வீடியோ சமூகவலைத்தங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் கரப்பான்பூச்சியைத் தனது வளர்ப்பு பிராணியாக வளர்த்து வந்தார். இந்த கரப்பான் பூச்சி கடந்த சில மாதங்களாக சிரமப்பட்டுவருவதை உணர்ந்துள்ளார். இதையடுத்து தனது கரப்பான் பூச்சியை ஒரு கால்நடை மருத்துவரிடம் எடுத்துச்சென்றுள்ளார். அந்த கரப்பான் பூச்சியைச் சோதித்த டாக்டர் அந்த கரப்பான் பூச்சி கர்ப்பமாக இருப்பதையும். பிரசவத்திற்குத் தயாராகிவிட்டதையும் அறிந்துள்ளார். மேலும் அந்த கரப்பான் பூச்சி முட்டையிடுவதில் சிக்கல் இருப்பதையும் இயற்கையாக முட்டை வெளியே வந்தால் அந்த கரப்பான் பூச்சியின் உயிருக்கு ஆபத்து இருப்பதையும் அவர் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து அவர் கரப்பான் பூச்சிக்கு ஆப்ரேஷன் செய்து முட்டையை வெளியே எடுக்க முடிவு செய்தார். அதற்குக் கரப்பான் பூச்சியை வளர்ப்பவரும் ஒப்புக்கொண்டால் ஆப்ரேஷன் நடந்தது.
இதையடுத்து டாக்டர் அந்த கரப்பான் பூச்சிக்கு ஆப்ரேஷன் செய்து அதன் வயிற்றிலிருந்த முட்டையை வெளியே எடுத்தனர். ஆப்ரேஷன் வெற்றி கரமாக முடிந்ததால் கரப்பான் பூச்சியும் உயிர் பிழைத்தது. முட்டைகளும் வெளியே வந்தது.
Russian vets successfully perform nano-surgery on cockroach that had pregnancy complications
— RT (@RT_com) December 27, 2019
MORE: https://t.co/LcWyowHeQY pic.twitter.com/zclHWEcf5Q
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments