அஜீத்துக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் அனைத்து நகரங்களிலும் கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அஜித் கால் மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள வலிக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட அஜித்துக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் சில நாட்களுக்கும் பின்னர் அஜீத் குடும்பத்துடன் வெளிநாட்டில் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments