சுறா கடித்து இழுத்துச் செல்லப்பட்ட நபர்.. போராடி மீட்ட கடலோர காவல்படை..! வீடியோ.

  • IndiaGlitz, [Friday,January 03 2020]

கலிபோர்னியா கடற்கரையோரத்தில் சனிக்கிழமை பெரிய வெள்ளை சுறாவால் கடிபட்ட நபரை அமெரிக்க கடலோர காவல்படை காப்பாற்றியது.

மீட்கப்பட்ட நபரான ஆதம் கூன்ஸ் இந்நிகழ்வினை மிராக்கிள் என்றே குறிப்பிடுகிறார். அமெரிக்க கடலோர காவல்படை மதியம் 3.15 மணியளவில் கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த நபரை சுறாமீன் கடித்ததாக புகார் வந்துள்ளது.

நான் கடிபட்டதை கூட உணரவில்லை. மாறாக உடனடியாக கடலில் நீருக்கடியில் வீசப்பட்டேன் என்று கூறியுள்ளார் ஆதம். இந்த தாக்குதலைக் கண்ட ஆதமின் நண்பர் 5அடி ஆழம் வரை கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார். கடலோர காவல்படை விமானத்தின் மூலம் காப்பாற்றி விமான நிலைய துணை மருத்துவர்கள் மூலமாக முதலுதவி செய்யப்பட்டது. அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அமெரிக்க கடலோர காவல் படை மீட்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளது.

“இது உண்மையிலேயே திகிலூட்டும் அனுபவமாக இருந்தது. நான் உயிருடன் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.” என்று ஆதம் ஏபிசி செய்தியிடம் கூறினார்.