நாடு திரும்புகிறார் முன்னணி சிஎஸ்கே வீரர்: ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதாக தகவல்!

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணி வீரர்களும் சமீபத்தில் துபாய் சென்றார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் துபாய் சென்ற வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பிவிட்டதாகவும், அவர் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

சற்று முன் சுரேஷ் ரெய்னா துபாயில் இருந்து இந்தியா திரும்பி வந்தார் என்றும், அவர் தனது சொந்த காரணம் காரணமாக நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

More News

தென்கொரிய விமான நிலையத்தில் திடீரெனச் சுருண்டு விழுந்து இறந்த இந்திய மாணவி- பரபரப்பு தகவல்!!!

தென்கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்துவரும் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தென்கொரிய விமான நிலையத்தில் திடீரென சுருண்டு விழுந்து

உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறி ஆடு!!!

அரியவகை செம்மறி ஆடு ஒன்று இந்திய மதிப்பில் ரூ.3.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது

சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'ரஜினி முருகன்' மற்றும் 'சீமராஜா' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பொன்ராம்.

மைக்ரோசாப்டின் சிறந்த கல்வியாளராகத் தேர்வுசெய்யப்பட்ட நம்ம ஊர் அரசு பள்ளி ஆசிரியர்!!!

தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பாக சிறந்த கல்வியாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

டிரைவராக மாறி 71 வயது கொரோனா நோயாளியைக் காப்பாற்றிய மருத்துவர்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

கொரோனா பரவல் கட்டத்தில் மருத்துவர்கள் தங்களுடைய நிலையைக்கூட பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்காக சகிப்பு தன்மையுடன் பணியாற்றுவதைப் பல நேரங்களில் பார்க்க முடிகிறது.