நாடு திரும்புகிறார் முன்னணி சிஎஸ்கே வீரர்: ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதாக தகவல்!

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணி வீரர்களும் சமீபத்தில் துபாய் சென்றார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் துபாய் சென்ற வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பிவிட்டதாகவும், அவர் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

சற்று முன் சுரேஷ் ரெய்னா துபாயில் இருந்து இந்தியா திரும்பி வந்தார் என்றும், அவர் தனது சொந்த காரணம் காரணமாக நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது