கமல்-ரேகா கிஸ்ஸிங் காட்சியை கலாய்க்கின்றாரா பிக்பாஸ் சுரேஷ்?
- IndiaGlitz, [Saturday,October 10 2020]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்ரவர்த்தி முதலில் அனிதாவிடம் ’நியூஸ் ரீடர்ஸ்கள் வணக்கம் சொல்லும் போது எச்சில் தெறிக்கும்’ எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் இரண்டு நாட்கள் ஓடியது
அதன்பின் ரேகா, சனம்ஷெட்டி உள்பட ஒரு சிலரிடம் வம்புக்கு இழுத்த சுரேஷ் தற்போது அடுத்ததாக மீண்டும் ரேகாவை சீண்டியுள்ளார். கமல்ஹாசன் மற்ற ஹீரோயின்களுடன் நடித்த கிஸ்ஸிங் காட்சிகளுக்கும் உங்களுடன் நடித்த கிஸ்ஸிங் காட்சிகளுக்கு ஒரு வித்தியாசம் உண்டு, உங்களுக்கு அதில் பெருமையும் உண்டு’ என்று கூறினார். ’அது என்ன பெருமை’ என்று ரேகா அதற்கு ’கமல் சாரை கிஸ் பண்ணிவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரே ஹீரோயின் நீங்கள் தான்’ என்று கூறினார்
அதற்கு ரேகா, ’அந்த படத்தில் அவர் சாகவில்லையே, என்னை மட்டும் தானே தள்ளி விட்டார் என்று கூற மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் கலகலப்பான சிரித்தனர். ’புன்னகை மன்னன்’ படத்தின் இந்த காட்சியை ரேகாவை சீண்டுவதற்காக சுரேஷ் கூறினாரா? அல்லது கமல்ஹாசனை கலாய்க்கின்றாரா? என்பது அவரது மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் என பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Idhellam episodes la podunga ya...#biggbosstamil #Biggbosstamil4 pic.twitter.com/1cyuORqip4
— Imadh (@MSimath) October 10, 2020