ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன சுரேஷ் தாத்தா: ஆரி ரசிகர்களின் வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக எவிக்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கும் நிலையில் சுரேஷ் தாத்தா மற்றும் அனிதா மட்டும் ஏன் வரவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர்.
இதற்கு சேனல் நிர்வாகம் தன்னை அழைக்கவில்லை என்றும் அதனால்தான் தான் வரவில்லை என்றும் வருத்தத்துடன் சுரேஷ் சக்ரவர்த்தி தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த நிலையில் சேனல் நிர்வாகத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டதை அடுத்து சற்று முன்னர் சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் உங்கள் குரல்கள் சேனல் நிர்வாகத்திற்கு கேட்டிருக்கிறது போல, அதனால் தற்போது எனக்கு அழைப்பு வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
சுரேஷ் தெரிவித்த இந்த நல்ல செய்தியை அடுத்து நாளை அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆரிக்கு வாழ்த்து சொல்லுங்கள் என்றும் மனதளவில் தளர்ந்து இருக்கும் ஆரிக்கு ஆறுதல் கூறுங்கள் என்றும், பொய்யாக இன்னும் நடித்து வருபவர்களின் முகத்திரையை கிழியுங்கள் என்றும் ஆரியின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
Your voices heard, decisions reversed.
— Suresh Chakravarthy (@susrisu) January 12, 2021
Thank you all #biggbossthatha
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments