மகள் திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் தந்தை கூறிய முக்கிய தகவல்: வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,May 30 2023]

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து அவரது தந்தை வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் துபாய் தொழிலதிபர் பர்ஹான் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக திருமணத்திற்கு செல்ல இருப்பதாகவும் சமூக ஊடகங்கள் மற்றும் ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்த செய்திக்கு ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்து இருந்தார். பர்ஹான் தனது நெருங்கிய நண்பர் என்றும் அவருடன் திருமணம் என்பது தவறான தகவல் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் கீர்த்தி சுரேஷ் மற்றும் பர்ஹான் காதலர்கள் என சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் கூடிய செய்தி வைரலானது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: கீர்த்திக்கும் பர்ஹானுக்கும் திருமணம் என்று வெளியான தகவல் தவறானது. பர்ஹான் பிறந்தநாள் அன்று கீர்த்தி வெளியிட்ட புகைப்படத்தை வைத்து ஒரு சில பத்திரிகைகள் அதை திருமணம் வரை கொண்டு சென்று விட்டது. கீர்த்திக்கும் பர்ஹானுக்கும் திருமணம் நிச்சயம் கிடையாது. கீர்த்திக்கு திருமணம் நிச்சயமானதும் நானே அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறேன். அதுவரை கீர்த்தியின் திருமணம் குறித்த வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம்.

நான் உறுதி செய்யாத எந்த தகவலையும் யாரும் நம்ப வேண்டாம், கீர்த்தி குறித்து பரவும் வதந்தியால் நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறோம். தயவு செய்து எனது மகளை விட்டு விடுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக கமல்ஹாசனுக்கு நடிக்க ரூ.150 கோடி சம்பளமா?

உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க 150 கோடி சம்பளம் தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணாடி கூண்டிற்குள் ‘கங்குவா‘ நாயகி… கவர்ச்சி புகைப்படத்தால் திணறும் நெட்டிசன்ஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது

மஹி ராக்ஸ்டார்… கத்தியபடியே சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடிய பாலிவுட் பிரபலம்… வைரல் வீடியோ!

மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது

பாடகி சுவேதா மோகனா இவர்? கலக்கலான போட்டோ ஷுட்டை பார்த்து வியந்த ரசிகர்கள்!

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி சினிமாக்களில் பின்னணி பாடகியாக இருந்துவரும் பாடகி ஒருவர் நடிகைகளைப் போன்று அசத்தலாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்

நீண்ட முடி, தாடி, மீசையுடன்… வைரலாகும் நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்‘ கெட்டப் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ் புதிய திரைப்படத்திற்காக தனது தோற்றத்தையே முழுமையாக மாற்றியுள்ளார்.