சென்னை போட்டி முடிந்த பின்னர் 10 கிலோ குப்பை: சுரேஷ் ரெய்னாவின் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 161 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு கொடுக்க, சிஎஸ்கே ஸ்பின்னர்களின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் அணி 138 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்த போட்டி முடிந்தவுடன் சிஎஸ்கே ரசிகர்கள் உடனே கலந்து செல்லாமல் மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்தனர். சுமார் 10 கிலோ குப்பைகளை அவர்கள் சேகரித்து மைதானத்தை தூய்மைப்படுத்தினர்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில், 'விசில்போடு ஆர்மியின் இந்த தூய்மை நடவடிக்கையை பார்த்து பெருமைப்படுவதாகவும், 'தூய்மை இந்தியா'வின் உதாரணமாக அவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
So proud to see #WhistlePoduArmy joining hands for #Cleanliness campaign! Post our last match, they collected over 10 kilos of garbage at the stadium.
— Suresh Raina???? (@ImRaina) April 7, 2019
Are you striving for a #CleanIndia? all you gotta do is post pictures/videos of cleaning your area using: #DontBeMeanKeepItClean pic.twitter.com/Gjyzvv8t6X
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout