வெற்றி பெற்ற இரவில் தோனி, ரெய்னா மகள்கள் செய்தது என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,April 27 2018]

நேற்று முன் தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் தோனி மற்றும் ராயுடு அதிரடியில் சென்னை அணி, 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான தோனியின் பேட்டிங் குறித்து புகழாத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை எனலாம்

இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் சென்னை அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலின் ஒரு அறையில் தோனி மகள் ஜிவா மற்றும் ரெய்னா மகள் கிரேசியா ஆகியோர் ஐபேடில் போட்டியின் ஹைலைட்ஸ் காட்சிகளை பார்த்து கொண்டிருக்கும் புகைப்படத்தை ரெய்னா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், 'கிரேஸியாவும், ஜிவாவும் மிகவும் பிஸியாக உள்ளனர். பெங்களூரு - சென்னை அணிகளுக்கிடையே நடந்த போட்டி ஹைலைட்டை அவர்கள் ஐபாடில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதே அவர்கள் டிஜிட்டல் உலகில் நுழைந்துவிட்டனர் என ரெய்னா கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னாவின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது