விராத் கோஹ்லி - சுரேஷ் ரெய்னா: முதல் ஐந்தாயிரம் யாருக்கு?

ஐபிஎல் திருவிழா இன்று முதல் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் இன்றைய முதல் போட்டி தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விராத் கோஹ்லியின் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியில் விராத் கோஹ்லிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் ஒரு சாதனை காத்திருக்கின்றது. இந்த சாதனையை யார் முதல் ஏற்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதாவது இன்றைய போட்டியில் சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை எட்ட இன்னும் 15 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதேபோல் பெங்களூரு கேப்டன் விராத் கோலி ஐந்தாயிரம் ரன்களை எட்ட இன்னும் 52 ரன்கள் தேவைப்படுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் அணி சென்னையாக இருந்தால் சுரேஷ் ரெய்னாவும், பெங்களூர் அணியாக இருந்தால் விராத் கோஹ்லியும் இந்த சாதனையை முதலில் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல் இருவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இருவருமே இந்த சாதனையை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய முதல் போட்டியிலேயே இருவரும் ஐந்தாயிரம் என்ற சாதனையை எட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.