சின்னத்தல ரெய்னா இல்லாத ஐபிஎல் தொடர்: அதிருப்தியில் ரசிகர்கள்!

தோனியை தல என்று ரசிகர்கள் அன்புடன் அழைப்பது போல் சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்றுதான் ரசிகர்கள் அழைத்து வந்தனர். அப்படி ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய வீரரான சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் ஏலம் எடுக்கப்படவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னா, 2021 ஆம் ஆண்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். ஆனால் அவரது ஆட்டம் சரியாக இல்லாததால் அவர் பல போட்டிகளில் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது ஏதாவது ஒரு அணி சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமன்றி விலைபோகாத வீரர்களை தேர்வு செய்து மீண்டும் ஏலம் மேற்கொள்ளும் இரண்டாவது பட்டியலிலும் சுரேஷ்ரெய்னா பெயர் இல்லை என்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா இடம்பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சின்ன தலயின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.