பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ்?

  • IndiaGlitz, [Wednesday,October 21 2020]

பிக்பாஸ் வீட்டில் நேற்றும் இன்றும் நடைபெற்று வரும் அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தினர் டாஸ்க் விளையாட்டு வினையாவது போல் பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது

இந்த டாஸ்க்கின்போது சனம் ஷெட்டியை கட்டையால் சுரேஷ் அடித்த விவகாரத்தை அடுத்து சுரேஷை சனம், ‘வாடா போடா’ என்று பேசியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து கன்ஃபக்சன் ரூமுக்கு சுரேஷை அழைத்து பிக்பாஸ் விசாரணை செய்தும் அங்கு பிக்பாஸ் முன் சுரேஷ் கதறி அழுததுமான காட்சிகள் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புவதாக சுரேஷ் கூறி வருவதாகவும் அதேபோல் சுரேசை வெளியேற்ற பிக்பாஸ் குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இருவேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே கடந்த சீசன்களில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சரவணனும், தற்கொலைக்கு முயன்ற மதுமிதாவும், மன உளைச்சல் காரணமாக ஓவியாவும் பிக்பாஸ் நிகழ்ச்ச்யில் இருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'சக்ரா' படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் புதிய நிபந்தனை!

நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதை தடை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ரவீந்திரன்  வழக்கு ஒன்றை பதிவு செய்தார் என்பதை பார்த்தோம்.

'சூரரை போற்று' ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு: பரபரப்பு தகவல்

சூர்யா நடித்த 'சூரரை போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டு முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

நான் உயிரோடு இருப்பது பிடிக்கவில்லையா? எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விரைவில் பாஜகவில் சேர இருப்பதாக

கதறி கதறி அழும் சுரேஷ்: என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்று வரும் அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தினர் டாஸ்க் விறுவிறுப்பாக இருக்கும்

பொங்கல் தினத்தில் ரிலீசாகும் முன்னணி நடிகரின் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் 'அண்ணாத்த' அஜித்தின் 'வலிமை' உள்பட ஒருசில திரைப்படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு