'தானா சேர்ந்த கூட்டம்' டப்பிங் குறித்து சுரேஷ்மேனன் அதிருப்தி
- IndiaGlitz, [Monday,January 22 2018]
சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சூர்யாவை அடுத்து இந்த படத்தில் பாராட்டுக்களை பெற்றவர் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த சுரேஷ்மேனன்
இந்த நிலையில் சுரேஷ் மேனனுக்கு டப்பிங் குரல் சரியாக பொருந்தவில்லை என்ற குற்றச்சாட்டு விமர்சகர்கள் மத்தியில் எழுந்தது. இதுகுறித்து சுரேஷ்மேனன் தற்போது விளக்கமளித்துள்ளார்.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்காக நானே முழு படத்திற்கும் டப்பிங் செய்தேன். ஆனால் படத்தில் என்னுடைய குரலுக்கு பதிலாக வேறொரு குரலை பயன்படுத்தியுள்ளார்கள். என்னுடைய குரல் மாதிரியை இந்த வீடியோவில் கேளுங்கள். எனது சொந்தக் குரலே எனது கேரக்டருக்கு சிறப்பாகப் பொருந்தியிருக்கும் என நான் நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்' என்று கூறி அவர் பேசிய ஒரு வசனத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை கேட்ட ரசிகர்கள் பலர், சுரேஷ் மேனன் குரலையே படத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இந்த குரலை பயன்படுத்தாதது படத்துக்கு பெரும் இழப்பே என்றும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
இந்த படத்தில் சுரேஷ் மேனனுக்கு இயக்குனர் கவுதம் மேனன் டப்பிங் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.