'பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா? ரஜினியின் 'ஜெயிலர்' பதிவு குறித்து சுரேஷ் காமாட்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த போஸ்டருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினி மற்றும் படக்குழுவினர்களுக்கு தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.
அந்த வகையில் சிம்பு நடித்த ’மாநாடு’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று ‘ஜெயிலர்’ படத்தின் போஸ்டர் வெளியானதை அடுத்து ரஜினிக்கும் படக்குழுவினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
எத்தனை குதிரைகள் ஓடினாலும், ரஜினிகாந்த் என்ற இந்தக் குதிரை விழும். சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை. சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற 3 எழுத்து மேஜிக் #ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும். வாழ்த்துக்கள் நெல்சன் மற்றும் சன்பிக்சர்ஸ்’ என்று பதிவு செய்திருந்தார்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இந்த பதிவு குறித்து ஊடகமொன்று ரஜினியை அவர் கிண்டல் செய்வதாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்திக்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருந்த சுரேஷ் காமாட்சி ’பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று கூறி இன்னொரு டுவிட் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது: பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க எழுத வந்துட்டா இப்படித்தான் பூடம் தெரியாம சாமியாடுவாங்க.
எத்தனை குதிரைகள் ஓடினாலும், @rajinikanth இந்தக் குதிரை விழும். சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை❤
— sureshkamatchi (@sureshkamatchi) June 17, 2022
சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற 3 எழுத்து மேஜிக் #ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும்.
வாழ்த்துகள் @Nelsondilpkumar & டீம். @sunpictures pic.twitter.com/EmYOOqXdzd
பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க எழுத வந்துட்டா இப்படித்தான் பூடம் தெரியாம சாமியாடுவாங்க. https://t.co/0t049UzanJ
— sureshkamatchi (@sureshkamatchi) June 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments