இனிமேல் சிம்பு பட அப்டேட்டை அவர்கிட்ட கேட்டுக்கோங்க: சுரேஷ் காமாட்சி டுவிட்

  • IndiaGlitz, [Wednesday,July 21 2021]

இனிமேல் சிம்பு படத்தின் அப்டேட்களை அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூற, அப்படி எல்லாம் உங்களை விட முடியாது என சிம்பு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அவ்வபோது சிம்பு ரசிகர்களுக்கு ’மாநாடு’ படத்தின் அப்டேட்களை அறிவித்து வந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு ரசிகர்களே, உங்களை நான் ’மாநாடு’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் நேரில் பார்க்கிறேன். சிம்பு நடிக்கும் அடுத்த படம் ஆரம்பித்துவிட்டது, ஐசரி கணேஷ் அவர்கள் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். எனவே இனிமேல் சிம்பு படத்தின் அப்டேட்களை அவர் கொடுப்பார், அவரை ஃபாலோ பண்ணுங்க. ஐசரி கணேஷ் அண்ணன் அவர்களுக்கும், தம்பி சிம்பு அவர்களுக்கும் கௌதம் மேனன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று டுவிட் செய்துள்ளார்.

இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் ’அப்படி எல்லாம் உங்களை விட்டு விட முடியாது என்றும் ’மாநாடு’ படத்தின் அடுத்த அப்டேட்டை சொல்லுங்கள் என்றும் கமென்ட்களில் பதிவு செய்து வருகின்றனர்.