பஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி: சுரேஷ் காமாட்சி

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கிய ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த படம் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தமிழகம் முழுவதும் வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததாக வ்நத தகவலை அடுத்தே ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து ஒரு நல்ல திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காதது குறித்து திரைத்துறையினர் பலர் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளனனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தமிழ்நாடு திரையரங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை நசுக்கும் அந்த பஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் தமிழக அரசால் முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என சுரேஷ் காமாட்சியின் டுவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டுவிட்டில் அவர் கூறிய பஞ்சபாண்டவர்கள் என்று யாரை குறிப்பிட்டுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தை தனி அதிகாரி மூலம் தமிழக அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள நிலையில், நடிகர் சங்கத்தையும் தனி அதிகாரி மூலம் கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்து நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் ’பஞ்சபாண்டவர்களின் அராஜகத்திற்கு தமிழக அரசால் முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என்று சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டார்களா 'வி ஆர் பாய்ஸ்?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விதிமுறைகளை மீறியதால் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட மதுமிதா, வெளியே வந்தவுடன் சேரன் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரின் மீதும் குற்றம் சாட்டினார் 

'பிகில்' டிரைலர் ரன்னிங் டைம் எவ்வளவு?

தளபதி விஜய்யின் பிகில்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதை அடுத்து இன்று காலை முதல் இதுகுறித்த ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது

'அசுரன்' படக்குழுவினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் பயனாளிகளின் பாராட்டுகளைப் பெற்றது 

ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் தமிழகத்திற்கு தேவை: பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் சர்ச்சைக்குரியவராக மாறி அவர் ஏற்கனவே கஷ்டப்பட்டு சம்பாதித்திருந்த புகழை இழந்து நெகட்டிவ் இமேஜூடன் திரும்புவார் என்பது தெரிந்ததே.

பதிவாளர் நோட்டீஸூக்கு நாசர், விஷால் பதில் கடிதம்!

நடிகர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்றும், நடிகர் சங்கத்தை ஏன் தனி அதிகாரி மூலம் செயல்பட வைக்க கூடாது என்றும் சமீபத்தில்  நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால்