சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசார் வேண்டாம்: டிஜிபியின் உத்தரவுக்கு 'மாநாடு' தயாரிப்பாளர் நன்றி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சாலை பாதுகாப்பு பணிகளில் இனி பெண் போலீசாரை ஈடுபடுத்த வேண்டாம் என டிஜிபி திரிபாதி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்
கடந்த பல ஆண்டுகளாகவே சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசார்களை பணியமர்த்த வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சாலைகளில் இனி பெண் போலீசார் பணியமர்த்த வேண்டாம் என டிஜிபி திரிபாதி அவர்கள் சற்று முன் உத்தரவிட்டார்
பெண் போலீசார் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது ஏற்படும் உடல்ரீதியான, மனரீதியிலான பிரச்சினைகள் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ’மிக மிக அவசரம்’ என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை பார்த்த ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் போலீசார் எந்த அளவுக்கு சிரமப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டனர். இந்த நிலையில் டிஜிபி அவர்களின் இந்த உத்தரவுக்கு ’மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநரும் ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளருமான் சுரேஷ் காமாட்சி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் "மிகமிக அவசரம்" படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் படம் உருவாகவும் மக்களிடம் சென்று சேரவும் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் "மிகமிக அவசரம்" படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் @mkstalin அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் tq pic.twitter.com/ATCd6qtWmR
— sureshkamatchi (@sureshkamatchi) June 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments