பாலாவின் 'வணங்கான்' ரிலீஸ் தகவலை அறிவித்த தயாரிப்பாளர்.. 'இந்தியன் 2' படத்திற்கு முன்பா? பின்பா?

  • IndiaGlitz, [Saturday,June 01 2024]

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், ‘வணங்கான்’ என்ற திரைப்படம் உருவாகி அதன் பிறகு சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடிப்பில் இந்த படம் உருவாகி வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் ‘வணங்கான்’ திரைப்படம் ஜூலை வெளியீடு என்று அறிவித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்திற்கு முன்னரோ அல்லது இரண்டு வாரம் கழித்தோ ‘வணங்கான்’ வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்பட பலர் நடித்த ‘வணங்கான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரித்துள்ளனர்.