மாஸ்டருக்கும் ஈஸ்வரனுக்கும் வரவேற்பு கொடுங்க மக்களே: பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்!
- IndiaGlitz, [Thursday,December 31 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்பட்டும் போதிய பார்வையாளர்கள் வரவில்லை என்ற குறை திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து வருகிறது.
50% இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 10% முதல் 20% பார்வையாளர்கள் மட்டுமே பெரும்பாலான திரையரங்குகளில் வருகின்றனர் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் திரையரங்குகளில் கூட்டம் வராததற்கு இன்னொரு காரணம் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் ஒன்று. எனவே தான் ’மாஸ்டர்’ திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தீவிர முயற்சி செய்து தற்போது ஜனவரி 13-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதேபோல் சிம்புவின் ’ஈஸ்வரன்’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களை பார்க்க மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் கூடும் என்றும், அதன் பின்னர் வழக்கம்போல் திரையரங்குகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சிம்பு நடித்துவரும் ’மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சினிமா துளிர்க்க, மக்களை திரையரங்குக்கு இழுக்க மிகப் பெரிய சக்தி தேவை. கடற்கரை, கடைகள் நிரம்பி வழிகின்றன. திரையரங்கும் நிரம்ப வேண்டும். அதற்கு ஈர்ப்புச் சக்திகளாக இறங்க வரும் ’மாஸ்டர்’ படத்திற்கும் ’ஈஸ்வரன்’ படத்திற்கும் மிகப் பெரிய வரவேற்பு கொடுங்கள் மக்களே என கேட்டு கொண்டுள்ளார்.
சினிமா துளிர்க்க, மக்களை திரையரங்குக்கு இழுக்க மிகப் பெரிய சக்தி தேவை. கடற்கரை, கடைகள் நிரம்பி வழிகின்றன. திரையரங்கும் நிரம்ப வேண்டும். அதற்கு ஈர்ப்புச் சக்திகளாக இறங்க வரும் #Master க்கும் #Eeswaran க்கும் மிகப் பெரிய வரவேற்பு கொடுங்கள் மக்களே❤ @actorvijay@SilambarasanTR_ pic.twitter.com/CWrqkTTYLf
— sureshkamatchi (@sureshkamatchi) December 30, 2020