இதுபோன்றதொரு ஊரை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்ததில்லை. சுரேஷ் காமாட்சி வாழ்த்து..!

  • IndiaGlitz, [Friday,October 25 2024]

இயக்குனர் மீரா கதிரவன் இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் உள்ள மனிதர்கள் மற்றும் ஊரை இதுவரை நான் திரைப்படங்களை பார்த்ததில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

’அவள் பெயர் தமிழரசி’ ’விழித்திரு’ போன்ற திரைப்படங்களை இயக்கிய மீரா கதிரவன் இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ‘ஹபீபி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் இருக்கும் நிலையில் இது ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படம் என்று பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்தே தெரிய வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படம் குறித்து கூறியிருப்பதாவது:

மீரா கதிரவன் தன் ஊரிலிருந்து ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறார். இதுபோன்றொரு ஊரை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்ததில்லை. இதுபோன்ற மனிதர்களைத் தமிழ்த் திரைப்படங்களில் அடிக்கடி சந்தித்ததில்லை.

இதுபோன்ற ஒரு வாழ்வியலை தமிழ்த் திரைப்படத்தில் முதல்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன். இதுபோன்ற சுவாரஸ்யத்தையும் இப்போதுதான் சந்திக்கிறேன்.

'ஹபீபி' என்ற இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். அன்பின் வழியது உயிர்நிலை!!

கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஈஷா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையில், யுகபாரதி பாடல் வரிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

லோகேஷ் கனகராஜின் 10 நிமிட LCU குறும்படம்.. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

ஒரு படத்தில் உள்ள கேரக்டரை இன்னொரு படத்திற்கும் கொண்டு செல்வது மிகச்சில  இயக்குனர்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய

'குட் பேட் அக்லி' படத்தின் வியாபாரம்.. சுரேஷ் சந்திரா அறிவித்த புதிய தகவல்..!

அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முக்கிய வியாபார தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு : ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அம்மனின் அற்புத சக்திகள் பற்றி ஆழமாகப் பேசியுள்ளார்.

வாமனன் சேஷாத்ரி சொல்லும் பூட்டு பரிகாரம்: எதிரிகள், வழக்குகள் நீங்கும் ரகசியம்!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் ஜோதிடர் வாமனன் சேஷாத்ரி அவர்கள் அளித்த பேட்டியில், தாந்திரீகம், மந்திரம் மற்றும் பூட்டு பரிகாரம் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

ஆரம்பமே அட்டகாசம்..! தவெக மாநாட்டில் 2 பெண் தலைவர்களின் கட்-அவுட்டுகள்..

தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில்,