'மாநாடு' படத்தின் 3 நாட்கள் வசூல்: சுரேஷ் காமாட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே படக்குழுவினர் அனைவருக்கும் தனித்தனியாக தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூபாய் 8 கோடியும் இரண்டாவது நாளில் ரூபாய் ஆறு கோடியும் வசூல் செய்தது என்பதும் இரண்டு நாள் வசூல் ரூபாய் 14 கோடி என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’மாநாடு’ திரைபடத்தின் 3 நாள் வசூல் 22 கோடி ரூபாய் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதனை அடுத்து இரண்டாம் நாளை விட மூன்றாம் நாள் அதிகமாக வசூல் அதிகரித்துள்ளது என்பதும் அடாது மழையிலும் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ’மாநாடு’ திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதே ரீதியில் சென்றால் ’மாநாடு’ திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

கனமழை எதிரொலி: நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை!

தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

ஜப்பானில் 'மாநாடு' கொண்டாட்டம்: வைரல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்கள் ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நிலையில் தற்போது சிம்புவின் 'மாநாடு' படத்தையும் ஜப்பானியர்கள் கொண்டாடி வருவது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதை மட்டும் செய்யாதீங்க: 'மாநாடு' படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்!

'மாநாடு' திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வரும் ரசிகர்கள் தயவு செய்து இதை மட்டும் செய்ய வேண்டாம் என இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பாவனியுடனான லவ் பிரச்சனை: அபினவ் மனைவி சொன்னது என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்பதும் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரம்யாகிருஷ்ணன் தொகுப்பாளினியாக மாறி உள்ளார்

'பீஸ்ட்' படத்தின் அட்டகாசமான அப்டேட் தந்த நெல்சன்!

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது என்பதும் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.