இன்னும் படமே ஆரம்பிக்கலை...  அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ... எப்படிர்ராராராரா.. கலாய்த்த பிரபல தயாரிப்பாளர்..!

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை காட்சி கிடையாது என்றும் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில யூடியூப் சேனல்கள் காலை 7 மணிக்கு இந்த படத்தின் விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றன. ஒரு சில ஊடகங்கள் நேற்று இரவே முதல் நாள் முதல் காட்சிக்கான விமர்சனத்தை பதிவு செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பார்த்த பழைய படத்தின் விமர்சன காட்சிகளை வெட்டி ஒட்டி இன்று வெளியான ’மாவீரன்’ படத்தின் விமர்சனம் போல் காட்டப்பட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்கிருந்துடா வர்றீங்க?! இன்னும் படமே ஆரம்பிக்கலை... ஒன்பது மணிக்குத்தான் முதல் ஷோவே... அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ... எப்படிர்ராராராரா என பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.