2024 நாடாளுமன்ற தேர்தல்.. நடிகர் சுரேஷ் கோபி, நடிகை கங்கனா ரனாவத் .. முன்னிலையா? பின்னடைவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திரை உலக பிரபலங்கள் சிலர் போட்டியிட்ட நிலையில் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்களா என்பதை தற்போது பார்ப்போம்.
தமிழ் உட்பட சில தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையுமான கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக இமாச்சலப்பிரதேஷ் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் முன்னிலையில் உள்ளார்.
கங்கனா ரனாவத் அவர்களுக்கு 373822 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்யா சிங் அவர்களுக்கு 324223 வாக்குகளும் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கங்கனா ரனாவத் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கேரளாவில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி பாஜகவின் சார்பில் போட்டியிட்ட நிலையில் அவருக்கு 258050 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சுனில்குமாருக்கு 209746 வாக்குகளும் கிடைத்துள்ளது. இங்கு சுரேஷ் கோபி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சத்ருஹன் சின்ஹா முன்னிலையில் இருப்பதாகவும் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமமாலினி முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout