'வலிமை' அப்டேட் எப்போது? அஜித் மேனேஜர் அறிக்கை!

  • IndiaGlitz, [Friday,December 11 2020]

தல அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். சமீபத்தில் இந்த படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் அதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழுவினர் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அப்டேட் எப்போது? என்று தொடர்ச்சியாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ’வலிமை’ படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன பின்னரும் இந்த படத்தின் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்பதே அஜித் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது

இந்த நிலையில் ’வலிமை’ அப்டேட் குறித்து அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

’வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு... படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு. அஜித் குமார் அவர்களும் அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு. போனிகபூர் ஆகிய இருவரும் இணைந்து ’வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது