'விடாமுயற்சி' படப்பிடிப்பின்போது அஜித்துக்கு விபத்து: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சில விபத்துக்கள் நடந்த வீடியோவை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளில் நடந்து வந்த நிலையில் அதில் கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன என்று ஏற்கனவே செய்தி வெளியாகின.
இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் அஜித் காரை ஓட்டிக்கொண்டிருக்க அவர் அருகில் ஆரவ் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்போது கார் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட விபத்து குறித்த காட்சி உள்ளது. அப்போது அஜித் மற்றும் ஆரவ் ஆகிய இருவரும் நிலை குலைந்த காட்சியும் அதில் இருக்கிறது.
’விடாமுயற்சி’ படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த போது ஏற்பட்ட விபத்து என்று சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ மட்டும் இன்றி மேலும் இரண்டு வீடியோக்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ’அஜித் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்து உள்ளாரா? என்று ஒரு பக்கம் ஆச்சரியம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Vidaamuyarchi filming
— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments