தன்னுடைய பைக்கிற்கு தானே பெட்ரோல் போடும் அஜித்: சுரேஷ் சந்திரா பகிர்ந்த புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,June 19 2022]

நடிகர் அஜீத் நடித்து வரும் ’அஜீத் 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அஜீத் கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து நாட்டிற்கு பைக் சுற்றுப்பயணமாக சென்றார் என்பதும் அவரும் அவருடைய குழுவினரும் இங்கிலாந்து நாட்டின் சாலைகளில் பைக்கில் உலா வரும் காட்சிகளின் புகைப்படங்கள் நேற்று இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் இங்கிலாந்து நாட்டின் பெட்ரோல் நிலையம் ஒன்றில் அஜித் தனது பைக்கிற்கு தானே பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களில் இங்கிலாந்து நாட்டிலிருந்து அஜித் இந்தியா திரும்புவார் என்றும் அதன்பிறகு அவர் ‘அஜித் 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

More News

12 வருடங்களுக்கு பின் திருப்பதி சென்ற 'விக்ரம்' பட நடிகை: வைரல் புகைப்படங்கள்

 உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்'  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர், 7 வருடங்களுக்கு பின் திருப்பதி

பூஜா ஹெக்டேவின் உச்சகட்ட கிளாமர் புகைப்படம்: பெற்றோருக்கு நன்றி சொன்ன ரசிகர்!

தளபதி விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் இணைந்து நடித்த நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு

சிம்ரனுக்கு முத்தம் கொடுத்த காதல் கணவர்: இன்று அவருக்கு ஸ்பெஷல் நாளாம்!

நடிகை சிம்ரனுக்கு அவரது காதல் கணவர் தீபக் முத்தம் கொடுத்த புகைப்படம் சிம்ரனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

நான் தனியாள் இல்லை, எனக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி: சாய்பல்லவி வீடியோ

 சமீபத்தில் நடிகை சாய் பல்லவி கூறிய மதம் சம்பந்தப்பட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விளக்கமளித்து நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் 'பீஸ்ட்' லீட்? நெல்சன் வைத்திருக்கும் டுவிஸ்ட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த போஸ்டர் மிகப்பெரிய