'விடாமுயற்சி' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது? ரிலீஸ் எப்போது? சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்..!

  • IndiaGlitz, [Thursday,April 04 2024]

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 60% மட்டுமே முடிவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்ற தகவலும் இல்லாத நிலையில் தற்போது இது குறித்த சில முக்கிய விவரங்களை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் என்றும் அதற்குள் அனிருத் இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் நாங்கள் வெளியிட்ட ’விடாமுயற்சி’ வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் எங்களுடைய கடினமான பணியை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுவரை 60% படப்பிடிப்பு முடிவடைந்ததற்காகவும் மீதி உள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்தை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த ஆண்டுக்குள் ’விடாமுயற்சி’ படம் ரிலீஸ் ஆகும் என்ற தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித், த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

More News

தனுஷின் 'ராயன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? டீசர் எப்போது ரிலீஸ்?

தனுஷின் 50வது திரைப்படமான 'ராயன்' படத்தை அவரே இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று

மீண்டும் பள்ளிக்கு போகலாமா? வெற்றிமாறன் - விமல் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

வெற்றிமாறன் தயாரிக்கும் திரைப்படத்தில் விமல் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மன ரீதியான துஷ்பிரயோகத்தை கடந்து வர எளிய சில வழிகள் எழுத்தாளர் ராக்கி கபூர் விளக்கம்.

சோசியல் மீடியா செயலிகள் அனைத்தும் நமது தின வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கிறது.உங்களுக்கு என்ன தெரியும் என்பதை மற்றவர்களுக்கு தெரியப் படுத்த இந்த சோஷியல் மீடியா உதவுகிறது...

குட்டி சாத்தான்களை ஏவி விடும் மாந்திரீகம் பற்றிய ரகசியங்கள் - நசீம் அம்மா

பிரபல ஆன்மீகவாதி நசீம் அம்மா, ஆன்மீக கிளிட்ஸ் யூடியூப் சேனலில் மாந்திரீகம் பற்றிய மர்மங்கள், அதன் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை பற்றி விளக்குகிறார்.

தொகுப்பாளர் ஆகிறார் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. பிரபல இயக்குனர் இடம் கிடைத்த அதிர்ஷ்டம்..!

பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் தொகுத்து வந்த ஒரு பிரபலமான நிகழ்ச்சியை இனி பிக்பாஸ் ஆரி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.