close
Choose your channels

கார் பந்தயத்தில் கலந்து கொள்வது மட்டுமல்ல.. அஜித் குறித்து சுரேஷ் சந்திரா கூறிய வேற லெவல் தகவல்..!

Saturday, September 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இந்த போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் செய்திகள் வெளியானது. மேலும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் இணையதளத்தில் வைரலான நிலையில் தற்போது இது குறித்து கூடுதல் தகவல்களை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சங்கரா திருப்பி வைத்துள்ளார்.

அதாவது அஜித் ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வது மட்டுமின்றி அஜித் பெயரில் ஒரு அணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

அஜித் குமார் ரேசிங் அணி

அஜித் குமார் ரேசிங் அணி என்பது ஒரு புதிய மற்றும் அற்புதமான சாகசத்தின் தொடக்கத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்: இந்த அணிக்கு ஃபேபியன் டஃபியூ அதிகாரப்பூர்வ ரேசிங் டிரைவராக இருப்பார். மேலும் ஒரு அற்புதமான செய்தி என்னவென்றால் இந்த அணி உரிமையாளர் அஜித் குமார் தான். எனவே மீண்டும் ரேசிங்கில் அஜித் திரும்பியிருக்கிறார்!

அஜித் சர்வதேச களத்திலும் FIA சாம்பியன்ஷிப்புகளிலும் பங்கேற்கும் இந்தியர்களில் ஒருவராக உள்ளார். அவர் 2004 ஆம் ஆண்டில் Formula Asia BMW F3 Championships மற்றும் 2010 இல் Formula 2 Championship போட்டியில் பங்கேற்றார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய ரேசிங் அணி, பல சர்வதேச ரேசிங் தொடர்களில் பங்கேற்கவுள்ளது, குறிப்பாக 24hseries ஐரோப்பிய தொடரில் porsche 992 GT3 cup பிரிவில் போட்டியிடவுள்ளது.

எங்கள் மிகப் பெரிய நோக்கங்களில் ஒன்று என்னவெனில் திறமையான இளம் டிரைவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வந்து , அவர்களுக்கு முழுமையான ஆதரவு தருவதே ஆகும். இதைப் பற்றி இன்னும் அதிகமாக விரைவில் சொல்ல ஆவலாக உள்ளோம்!

இவ்வாறு சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment