'விடாமுயற்சி' ரிலீஸ் தேதியை உறுதி செய்த சுரேஷ் சந்திரா.. குஷியில் ரசிகர்கள்..!
- IndiaGlitz, [Sunday,December 08 2024]
அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தேதியை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா உறுதி செய்துள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் டப்பிங் பணியை கூட சமீபத்தில் அஜித் தொடங்கினார் என்றும் செய்திகள் வெளியான நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாகவும், வரும் 13ஆம் தேதி முதல் இந்த பாடல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ அல்லது ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் ஒன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் ’விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினம் வெளியாகும் என்று உறுதி செய்துள்ளார். மேலும், அஜித் தனது பகுதிக்கான டப்பிங் பணியை முடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பொங்கல் தினத்தில் அஜித்தின் ’விடாமுயற்சி’ ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அஜித் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு பொங்கல் என்பது உறுதி என்று கூறலாம்.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
AjithKumar completes dubbing 🎙️ for VidaaMuyarchi in Baku, Azerbaijan 📍#Vidaamuyarchi In Cinemas worldwide from PONGAL 2025!#AjithKumar #MagizhThirumeni #ToufanMehri @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @anirudhofficial @omdop @srikanth_nb @MilanFern30… pic.twitter.com/3jDcWhs7UH
— Suresh Chandra (@SureshChandraa) December 7, 2024