வேற லெவல் எண்டர்டெயின்மெண்ட்.. அஜித் படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த சுரேஷ் சந்திரா..!

  • IndiaGlitz, [Thursday,October 10 2024]

அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் அறிவிப்பு வெளியான நாளே அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், பொங்கல் ரிலீஸ் என மீண்டும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ’விடாமுயற்சி’ படம் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் நிலையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சற்று முன் தனது சமூக வலைதளத்தில் ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் என்ற பகுதியில் தற்போது ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், வேற லெவல் என்டர்டைன்மென்ட் பெரிய திரையில் காத்திருக்கிறது என்றும், 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் உறுதியாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அஜித்தின் ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்த நிலையில், இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜித்தின் ’விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், ’குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

1000 ரூபாய் கேட்ட ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பிய ஜிவி பிரகாஷ்.. ரசிகரின் ரியாக்சன்..!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷிடம், ரசிகர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் அவசரமாக 1000 ரூபாய் கடன் கேட்ட நிலையில், ஜி.வி. பிரகாஷ் அந்த ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பி உள்ளதாக

10 ஆயிரம் கொடுத்தால் 50 ஆயிரம்.. ஐபோன் இலவசம்.. பாடகி சித்ரா அதிர்ச்சி..!

10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 50 ஆயிரம் ரூபாய்  கிடைக்கும் என்றும் ஐபோன் இலவசம் என்றும் பாடகி சித்ரா பெயரில் மோசடியான விளம்பரம் வெளியானதை அடுத்து அவர்

பாடகி சின்மயி வீட்டிற்கு வந்த சமந்தா.. அடிப்பாவி என புலம்பிய கணவர்..!

பாடகி சின்மயி வீட்டிற்கு நடிகை சமந்தா வந்த நிலையில், அவrஐ பார்த்து  சின்மயி கணவர் அடிப்பாவி என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எஸ்.வி.சேகர் வீட்டில் பிரமாண்ட கொலு! நூறு வருட பழமையான பொம்மைகளின் அழகு

நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களின் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட கொலுவை ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் காணலாம்.

சமந்தா ஒரு பான் இந்திய சூப்பர் ஸ்டார்.. அவருடன் ஒரு படத்தில் நடிப்பேன்: பிரபல பாலிவுட் நடிகை..!

சமந்தா ஒரு பான் இந்திய நடிகை என்றும், அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் பிரபல பாலிவுட் நடிகை சமீபத்தில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.